
ஹொரனை தக்ஷிலா உயன வீட்டு குடியிருப்பு கட்டிட தொகுதிக்கு பின்னால் இருந்து, பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மாலை காவல் துறைக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம், ஹொரனை மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த குழந்தையின் தாய் பற்றிய எவ்வித தகவலும் இது வரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





