
அழகான பெண் குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்மணியை பொலிசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்துள்ளனர்.கேரளாவில் கோழிக்கோடு மாவட்டம் நாதபுரம் நல்லாச்சி டவுண் பகுதியில் பெண் ஒருவர் கையில் அழகான 4 மாத கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்துள்ளார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த பெண் குழந்தையை கடத்தி வந்திருப்பதாக கருதி அவரிடம் விசாரித்துள்ளனர்.ஆனால் அந்த பெண் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் மலையாளமும் தெரியவில்லை.
இதையடுத்து பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணை பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.காவல் நிலையத்தில் அந்த பெண்ணிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த தகவல், அதே பகுதியில் இருந்த, அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த பெண்ணின் 7 வயது மகளுடன் காவல் நிலையத்துக்கு சென்ற உறவினர்கள், அந்த 4 மாத பெண் குழந்தை அவர் பெற்ற குழந்தைதான் என விளக்கியுள்ளனர்.இதையடுத்து பொலிசார் அந்த பெண்ணையும் குழந்தையையும் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.





