வீட்டில் கழிவறை இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம்!!

635

2400360846

உத்தரபிரதேச மாநிலத்தில் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியுள்ள அரசு ஊழியர்கள்தான் இனி ஊதியம் பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.கோண்டா மாவட்டத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாவட்ட ஆட்சியர் உபாத்யாயா இதனை அறிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்த மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகளவில் உள்ளன.இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிவறை கட்டப்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கப்பட உள்ளது.

அப்படி கழிவறை கட்டாத அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் தங்கள் சம்பளத்தை எடுக்க முடியாது.தங்கள் வீடுகளில் கழிவறை கட்டப்பட்டுள்ளதை நிரூபித்து துறைத் தலைவர் மூலம் சான்றிதழ் பெற்று, கருவூலத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே சம்பளத்தை எடுக்க முடியும்.இதற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசியுள்ளார்.