கொள்ளையடிக்க வந்த திருடனை வீட்டிற்குள் பூட்டிய பெண்கள்: சோகத்தில் முடிந்த திருடனின் போராட்டம்!!

566

police

சுவிட்சர்லாந்து நாட்டில் கொள்ளையடிக்க வந்த திருடன் ஒருவனை வீட்டிற்குள் பூட்டிவைத்த இரண்டு பெண்களின் அசாதாரண துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள 4-வது மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் Stauffacherstrasse என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் திருடன் ஒருவன் மர்மமான முறையில் நுழைந்துள்ளான்.வீட்டிற்குள் நுழைந்ததும் அங்குள்ள பொருட்களை தேடி அலைந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர்.

நபர் ஒருவர் வீட்டிற்குள் சந்தேகப்படும்படியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அவர்கள் ‘யாரும் இல்லாத வீட்டிற்குள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்’ என கோபமாக கேட்டுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத திருடன் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் முன்பின் முரணாக பேசியுள்ளான்.வீட்டிற்குள் நுழைந்துள்ளது திருடன் தான் என உறுதிசெய்த அந்த இரண்டு பெண்களும், கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் கதவினை பின்பக்கமாக பூட்டியுள்ளனர்.பின்னர், உடனடியாக அப்பகுதி பொலிசாருக்கும் அவசர தகவல் அளித்துள்ளனர்.திருட வந்த வீட்டிற்குள் எதிர்பாராமல் சிக்கொண்ட அந்த திருடன், அங்கிருந்து தப்பிக்க பலவாறு முயற்சி செய்துள்ளான்.

சில நிமிடங்கள் போராட்டத்திற்கு பின்னர், ஒருவழியாக வீட்டை விட்டு தப்பி வெளியேறிய திருடனிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.வீட்டு வாசலிற்கு திருடன் வந்தபோது, அங்கு பொலிசார் கை விலங்குடன் நின்றுருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றபோது பொலிசார் அவரை கைது செய்தனர்.

44 வயதான அந்த சுவிஸ் திருடன் கொள்ளையடிக்க தான் வீட்டிற்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவர பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இரவு நேரத்தில் வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்த திருடனை லாவகமாக பொலிசாரிடம் சிக்க வைத்த இரண்டு பெண்களின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.