
தமிழில் பல படங்களில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத பல நடிகைகள், இப்போது தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். அந்த பட்டியலில் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு முதல் இடம் கொடுத்தாலும் தவறில்லை.சென்ற மாதம் வெளியான புரூஸ் லீ படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திவிட்ட அவர், ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
ஷூட்டிங், போட்டோஷூட் என அனைத்தையும் ஒரே நாளில் முடித்துவிட்டார்களாம்.ராகுல், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள நண்ணக்கு பிரேமதோ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படம் பெரிய வெற்றிபெற்றால், சம்பளத்தை இன்னும் உயர்த்தும் திட்டத்தில் இருகிறாராம் இந்த நடிகை.





