மேற்படி நிகழ்வானது வன்னிமாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளா் அருட்கலாநிதி எஸ்.சந்திரக்குமாா் அவா்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ கித்சிறி அத்துலத்முதலி அவா்களும் அவருடைய குடும்பமும் கலந்து கொண்டனா். மேலும் இந்த நிகழ்வில் நீதி அமைச்சா் கௌரவ திரு. விஐயதாஸ ராஜபக்ஷ அவா்களின் செயலாளா் திரு சிறில கமகே, மெதடிஸ்த திருச்சபை மன்னாா் முருங்கன் சேகரத்தின் முகாமைக் குரு அருட்திரு ரவி முருகுப்பிள்ளை , வட மாகாணசபை உறுப்பினா் திரு.றிப்க்கான் பதியுதீன், மன்னாா் சுவிஷேச ஐக்கியத்தின் தலைவரும் எபனேசா் தேவசபையின் போதகருமாகிய ச. சந்திரன் , மற்றும் கிறிஸ்தவ மதப் போதகா்களும் சபை மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், அனைத்துப் பாிசில்களும் கித்சிறி அத்துலத்முதலி நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






