வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை சாலைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!!

476

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சாலை உத்தயோகத்தர்கள், ஊழியர்கள் இன்று மதியம் 1 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வடக்கில் இருக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 56 பேரூந்து வண்டிகள் சேதப்படுத்தியமைக்கு எதிராக, நீதியை நிலைநாட்டவேண்டிய உத்தியோகத்தரே நீதியை நாட்டவில்லை, மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சட்ட ரீதியற்ற வழித்தட அனுமதிப்பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இ.போ.ச சாலை முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த சாலை முகாமையாளர், இக்கண்டனப் போராட்டமானது பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவரத்துச் சேவை இடம்பெறும் எனவும் எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

 20151231_133726 20151231_133731 20151231_133927 20151231_134058 20151231_134119 20151231_134127 20151231_134136 20151231_134155 20151231_134222 20151231_134300 20151231_134307