பள்ளத்தில் விழுந்து 18 வயது மாணவர் உயிரிழப்பு!!

472

1 (40)

நோட்டன்பிரிஜ், விதுலிபுர பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு குறித்த மாணவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அந்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போதே மாணவன் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 18 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.