தவறான திசையில் 8 நிமிடங்கள் பறந்த மலேசிய விமானம்: விமானி எடுத்த அதிரடி முடிவு!!

569

article-0-1C52C8E700000578-313_634x422

மலேசியா நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று குறிப்பிட்ட நகருக்கு செல்லாமல் தவறான திசையில் 8 நிமிடங்கள் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மலேசியா நாட்டை சேர்ந்த MH132 என்ற பயணிகள் விமானம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் உள்ள அக்லாண்ட் நகரிலிருந்து இரவு 2.23 மணியளவில் புறப்பட்டுள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் நகருக்கு புறப்பட்ட அந்த விமானம் ஓடுத்தளத்தில் இருந்து எழும்பியதும் அவுஸ்ரேலியாவுன் மெல்போர்ன் நகரை நோக்கி திசைமாறி பறந்துள்ளது.இவ்வாறு சுமார் 8 நிமிடங்கள் தவறான திசையில் பறந்ததை கவனித்த விமானி உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்புக்கொண்டு சரியான வழி என்ன என கேட்டுள்ளார்.

பின்னர், விமானிக்கு கோலாலம்பூர் செல்லும் வழி கூறப்பட்டதும் தாஸ்மேனிய கடற்பரப்பில் பறந்துக்கொண்டு இருந்த அந்த விமானம் உடனடியாக திறப்பப்பட்டு கோலாலம்பூர் நோக்கி சரியான பாதையில் பயணித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து பேசிய விமான நிலைய அதிகாரிகள், கோலாலம்பூர் நகருக்கு செல்லும் வழிப்பாதையை மலேசியா விமானம் ஏற்கனவே கொடுத்திருக்கும்.

ஆனால், இதில் ஏதோ குழப்பம் ஏற்படவே விமானிக்கு சரியான பாதையை தெரியப்படுத்த முடியாமல் போயுள்ளது என கூறியுள்ளார்.எனினும், இந்த சம்பவத்திற்கு மலேசிய விமான நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.கடந்த காலங்களில் சரியான விமான பாதையில் செல்லாமல் திசை மாறுவதால் நடுவானில் விமானங்கள் மோதிக்கொண்டு விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.