காலே இலை சாப்பிடுங்கள்!!

884


kale_002

முட்டைகோஸ் வகையை சேர்ந்த காலே இலையின் (Kale leaf) மருத்துவ நன்மைகள் பற்றி அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.நன்கு சுவை தரக்கூடிய இந்த காலே இலையை சமையல் செய்யும் போது கூடவே கொஞ்சம் மிளகு சேர்த்துக்கொண்டால் சுவை அதிகரிக்கும்.



அடங்கியுள்ள சத்துக்கள்

விட்டமின் ஏ, பி சி மற்றும் கால்சியம், சோடியம், பொட்டசியம், புரதச்சத்து இரும்புச்சத்து, குளோரோபில், இன்டோல் 3 கார்பினோல் சத்துக்கள் உள்ளது.மேலும் 100 கிராம் காலேயில் 49 கலோரி ஆற்றல் கிடைக்கிறது.மேலும், இதில் உள்ள இன்டோல் 3 கார்பினோல் (Indole 3 carbinol) பெருங்குடல் புற்றுநோயை குறைக்க உதவுகிறது.



மருத்துவ பயன்கள்



1. 45 விதமான ப்ளேவானாய்டுகள்(Flavonoids) நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.


2. ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால் புற்றுநோயை எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், சரும ஜொலிப்புக்கும் உதவுகிறது.

3. 130 கிராம் காலே இலையில் 10.4 சதவீதம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கொழுப்பை குறைக்க உதவுகிறது.


4. இதில் உள்ள Bile acids கொழுப்பு வகை உணவுகளை ஜீரணிக்க உதவுகிறது, அதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

5. Omega-3 Fatty Acids நிறைந்துள்ளதால், மன அழுத்தம், ஆஸ்துமா போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது.

6. இதில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ்(Phytonutrients) நுரையீரல் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

7. காலே இலையில் உள்ள விட்டமின் k இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களிலிருந்து காக்கிறது.


இதனால் இதயநோயாளிகள் இந்த இலையை சாப்பிடலாம்.

8. மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளதால், பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

9. இதில் நிறைந்துள்ள மக்னீசியம் சத்து டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.

10. இதில் உள்ள லுடீன்(Lutein) மற்றும் ஸீக்ஸாக்தைன்(Zeaxanthin) எனும் கரோட்டினாய்டுகள் கண் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கிறது.