விண்வெளி ஆராய்ச்சியில் சம காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவரும் விடயமாக செவ்வாய் கிரக ஆராய்ச்சி காணப்படுகின்றது.இக் கிரகத்திற்கு மீள முடியாத பயணமாக மக்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாசா நிறுவனம் பூமியில் உள்ள அனைவரும் Virtual Reality நுட்பத்தின் ஊடாக செவ்வாய் கிரக அனுபவத்தை பெறுவதற்கு வசதி செய்யவுள்ளது.
இத் தொழில்நுட்பம் இவ்வருடத்தின் இறுதிப் பகுதிக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், Oculus, HTC, மற்றும் Sony சாதனங்கள் ஊடாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.