
பலாங்கொடை – பிங்னவல பகுதி தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதால் ஊழியர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 150க்கும் அதிகமானோர் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடை வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற சுகயீனங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் இவர்களது நிலை ஆபத்தானதாக இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்று பிற்பகல் குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற உற்சவத்தின் பின்னர் இவர்கள் சுகயீனமுற்றதாக தெரியவந்துள்ளது.





