சுற்றுலா தரப்படுத்தலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

435

Sri-Lanka-Tourism-campaign

உலகில் சுற்றுலா செல்வதற்கான 16 இடங்களில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.உலக பிரசித்தப்பெற்ற கொன்டோ நாஸ்ட் ட்ரவலர்ஸ் சஞ்சிகையின் “டொப் 16 பிலேஷஸ் டு கோ இன் 2016” என்ற பகுதியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்ந்தும் சனநெருக்கமற்ற செலவுக்குறைந்த இடமாக கருதப்படுகிறது என்று சஞ்சிகையின் ஆசிரியர் கத்தரின் லாகிரேவ் தெரிவித்துள்ளார்.குறித்த சஞ்சிகையில் கொழும்பு மற்றும் காலி என்பன முக்கிய தங்குமிடங்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அவுஸ்திரேலியா முதலாம் இடத்திலும், மொஸாம்பின் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அடுத்த 13 இடங்களில் ஆசிய நாடுகளில் ஜப்பான் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் கடந்த 11 மாதங்களில் 1.6 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இவர்களின் மூலம் இலங்கைக்கு 2.5பில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.