காதலியை 100 முறை கடித்து குதறிய காதலனின் நாய்-மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

461

640px-Mad_dog

கனடாவில் 21 வயதான இளம்பெண் ஒருவரை அவருடைய காதலனின் நாய் 100 முறை கொடூரமாக கடித்து குதறியதை தொடர்ந்து அபாயமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத அந்த பெண் தன்னுடைய சகோதரியுடன் நேற்று வெளியே சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்த அவருடைய காதலனின் நாய் திடீரென அந்த பெண்ணை தாக்க தொடங்கியுள்ளது.கை, கால்கள், வயிறு, கழுத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அந்த நாய் கொடூரமாக கடித்து குதறியுள்ளது.சகோதரியை காப்பற்ற வந்த பெண்ணையும் அந்த நாய் விட்டு வைக்கவில்லை. அலறல் சத்தம் கேட்டு வந்த நபர் ஒருவர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.தரையில் விழுந்து புரண்ட அந்த பெண்ணை நாய் விடாமல் கடித்து குதறியுள்ளது. காட்சியை கண்ட அந்த நபர் விரைந்து நாயை விரட்டியுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அவரையும் நாய் கடித்துள்ளது. இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிசார் நாயை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.உடனடியாக இரண்டு பெண்களையும் மீட்ட பொலிசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதில் தாக்குதலுக்கு முதலில் உள்ளான பெண் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், காயமுற்ற நாயை விஷ ஊசி போட்டு கொல்வது குறித்து பொலிசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.