வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!(படங்கள்)

269

 
 
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயை இல்லாதொழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியா வைத்தியசாலை மற்றும் வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் மருந்து வகைகள் சுகாதார பிரிவினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தோடு அரச அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவினர் சுகாதார நடவடிக்கை முன்னெடுக்கும் முகமாக அனைத்து வீடுகளையும் பரிசோதித்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த மாதம் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையால் வீதிகள் மற்றும் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கிக் கிடந்ததால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது. எனவே நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாத்துக் கொள்ளும் முகமாக சுகாதார பிரிவினரால் மருந்து வகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

dengoo (1) dengoo (2) do