
நாட்டின் சில பகுதிகளில் தற்போது கடினமான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதகமான அபிவிருத்திகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என, நோர்வே அரசர் ஹரால்ட் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ள நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் முஸ்தபா எம் யாபருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, இவ் வருட ஆரம்பம் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்கள் குறித்து, முஸ்தபா எம் யாபர் தனது மகிழ்ச்சியை வௌியிட்டார்.





