
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் அவர் இந்த மாதம் நடுப்பகுதியில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் இந்திய தரப்பில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





