வெளிநாட்டு மீனவர்களுக்கு சலுகை!!  

433

fishermen_3

பாரிய அளவிலான வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு, இலங்கை தேசிய கொடியுடன் இலங்கையை அண்டியுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளது.இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.சீ.எல். பெர்ணாண்டோ இதனை  தெரிவித்துள்ளார்.இறுக்கமான சட்டத்திட்டங்களின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.எதிர்வரும் வாரங்களில் இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களை தடுப்பதற்கான வழி, அவர்களை கைது செய்வது, மற்றும் படகுகளை பொறுப்பேற்பது பறிமுதல் செய்வது என்பதில் மாற்றம் எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.