கல்லறையில் புதைத்த பெண்ணின் உடலை எடுத்து உறவு கொள்ள முயன்றவர் கைது!!

539

1 (8)

உத்தரபிரதேசத்தில் கல்லறையிலிருந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்து உறவு கொள்ள முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹதார் மாவட்டம் சடாபாத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை அவரது உறவினர்கள், அருகில் உள்ள லால் தர்வாசா சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.மறுநாள் காலை அந்த பெண்ணின் உடல் கல்லறைக்கு வெளியே கிடந்துள்ளதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அவரது உடலில் பாலியல் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் காணபட்டதால், பொலிசில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.பொலிஸ் விசாரணையில், பதேப்பூர்சிக்ரியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ராஜேந்திரா என்பவரை கைது செய்துள்ளனர்.

அவர் உறவினர்கள் பெண்ணின் உடலை புதைத்து விட்டு சென்ற பிறகு இரவு மது அருந்தி விட்டு வந்து கல்லறையை தோண்டி உடலை எடுத்து குற்ற செயலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.இதையடுத்து அந்த பெண்ணின் உடல் பரிசோதனைக்கு பிறகு மீண்டும் 2வது முறை உறவினர்களால் அடக்கம் செய்யபட்டுள்ளது.