வவுனியாவில் 12வயதுச் சிறுமி உயிரிழப்பு!!

821

unchal

வவுனியா சாந்தசோலை வீதியில் கொக்குவெளி பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் 12வயதுடைய சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சாந்தசோலை கொக்குவெளியைச் சேர்ந்த எஸ்.சுனித்திரா என்ற 12 வயதுடைய சிறுமி விட்டில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சமயம் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அவரை உடனடியாக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் வைத்தியர்கள் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனையின் பின் சிறுமியின் உடல் இன்று மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.