வவுனியா மரக்காரம்பளை காத்தான் கோட்டம் கிராமத்தின் வீதி கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகின்றது . இக்கிராமத்தில் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இக் கிராமத்திற்கு எவ்வித அபிவிருத்தியும் நடைபெறாத நிலையில் மக்கள் வாழ்த்து வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் இவ் வீதியுடாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் தங்களது பாடசாலை பருவத்தினை கடந்து செல்கின்றனர்.
வவுனியா நகரத்திலிருந்து 5கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் இக் கிராமத்தின் வீதி புரணமைப்பு இதுவரை நடைபெறவில்லை.
இக் கிராமத்தின் வீதி வீதி புரணமைப்பு தொடர்பாக சசிகுமார் டனுசன் என்ற மாணவன் கருத்துத் தெரிவிக்கையில், இவ் வீதியுடாக தான் தினசரி எனது பாடசாலைக்குச் சென்று வருகின்றேன். மழை பெய்தால் என்னால் பாதணிகூட அணிந்து செல்ல முடியாத நிலையில் இவ் வீதி காணப்படுகின்றது. நீங்களாவது எமது வீதியினை சீர்செய்து தருவீர்களா என தனது ஆதங்கத்துடன் தெரிவித்தான்.
இவ் வீதி தொடர்பாக முதியவர் கருத்து தெரிவித்தபோது, எனது பெயர் கனகசபை கந்தசாமி தற்போது எனக்கு 74 வயது ஆகின்றது. எனது இந்த முதுமைப்பருவத்தில் இவ் வீதியூடாக என்னால் நடந்து செல்வதற்குக்கூட கடினமாக காணப்படுகின்றது. 2வருடங்களுக்கு மேலாக இவ் வீதி பழுதடைந்து காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.






