வடமாகாண சுகாதார அமைச்சினால் அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகம்!!

943

ambulance-service2

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முதன்முறையாக அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 06.01.2015 இந்த சேவை சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலைமைகளில் பொதுமக்கள் இந்தசேவையை பெற்றுக்கொள்ளமுடியும். இதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.