வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினால் நிர்வகிக்கப்படும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியத்தினாரால் நடாத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சிநெறிக்கான உபகரணங்கள் பிரான்சை சேர்ந்த வெளிச்சம் எனும் அமைப்பினால் வழங்கப்பட்டது.
வவுனியா பம்பைமடுவில் உள்ள மேற்படி நிலையத்தில் கடந்த 02.01.2016 அன்று நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் திரு.அகிலேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வைகறைக்கான இணைப்பாளர் தாதிய பரிபாலகர் திருபாலநாதன், பயிற்சி நெறி ஏற்பாட்டாளர் திரு.வாசுதேவன், பயிற்றுனர் திரு.சிமொன்சாந் மற்றும் வைகறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.