அறைகுறை ஆடைகளுடன் பாதையில் சென்ற வௌிநாட்டுப் பிரஜை கைது!!

472

1 (8)

கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியான வீசா இன்றி பாதையில் சென்று கொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.00 மணியளவில் நாத்தண்டிய – கொட்டரமுல்ல பிரதேசத்தில் வைத்து அந்தப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

அறைகுறை ஆடைகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் பிரதான பாதையில் சென்று கொண்டிருந்த அந்தப் பிரஜை குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அவரை கைது செய்ததுள்ளதாக எமது அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர், தான் 34 வயதுடைய ரஷ்யப் பிரஜை என்றும், மொஸ்கோவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்ததாகவும் கடதாசி தாள் ஒன்றில் எழுதி பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதென்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.