தீவிரவாத தாக்குதலில் பலியான வீரரின் உடலை தகன மேடை வரை சுமந்து சென்ற மகள்!!

521

bsf_002

பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினரில் ஒருவரான மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியின் உடல் தகனம் குர்தாஸ்பூரில் நடைபெற்றுள்ளது.பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை 4வது நாளான இன்று அதிகாலை தான் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் 7 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.பலியான பாதுகாப்பு படையினரில் ஒருவரான மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியின் உடல் தகனம், குர்தாஸ்பூரில் நடைபெற்றுள்ளது.அப்போது, ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்து சென்றுள்ளார்.

பொதுவாக, இந்து மதத்தில், ஆண்கள் மட்டுமே இறந்தவர்களின் உடலை சுமக்க தோள் கொடுப்பது வழக்கம்.ஆனால் மது, அந்த சம்பிரதாயத்தை உடைத்து, தன் தந்தையின் உடலை சுமந்து சென்றுள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், சம்பவத்தன்று குண்டு வெடிப்பு சத்தம் கேட்டவுடன், என் தந்தை சீருடை அணிந்து கொண்டு சண்டைக்கு புறப்பட்டுச் சென்றார்.மேலும், தன் குடும்பத்தினர், 2 மணி நேரம், படுக்கைக்கு அடியிலேயே பதுங்கி இருந்ததாகவும், தீவிரவாதிகளின் கண்ணில் படாமல் இருக்க இருட்டியவுடன் விளக்குகளை அணைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.