இந்தியாவில் 55 ஆயிரம் கிராமங்களில் மொபைல் சேவை இல்லை!!

549

how-to-unlock-cell-phone-1

இந்தியாவில் 55 ஆயிரம் கிராமங்களில் மொபைல் சேவை முழுமையாக வழங்கப்படவில்லை என தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்திய அளவில் உள்ள 5 லட்சத்து 97 ஆயிரம் கிராமங்களில் 5 லட்சத்து 42 ஆயிரம் கிராமங்கள் மொபைல் சேவை பெற்றுள்ளன.மீதமுள்ள 55, 669 கிராமங்களுக்கு இன்னும் மொபைல் சேவைகள் முழுமையாக வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் ஒடிசா முதல் இடத்தை பிடித்துள்ளது. அங்குள்ள 10,398 கிராமங்கள் மொபைல் சேவைக்கான கோபுரங்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட(5,949) மத்திய பிரதேசம்(5,926) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.இந்திய பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 1,275 கிராமங்களில் மொபைல் சேவைகள் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.