பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு கால்நடையாக வந்து சேர்ந்த அகதி: புகலிடம் வழங்கிய அரசு!!

279

refugee_walk_002

பிரான்ஸ் நாட்டிலிருந்து புகலிடம் கோரி பிரித்தானியாவிற்கு பல மைல்கள் கடந்து கால்நடையாக வந்த அகதி ஒருவருக்கு பிரித்தானிய அரசு புகலிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சூடான் நாட்டை சேர்ந்த அப்துல் ரஹ்மான் ஹரூன்(40) என்பவர் பிரித்தானிய நாட்டில் குடியேறுவதற்காக சென்றவர் எதிர்பாராதவிதமாக பிரான்ஸ் நாட்டில் நுழைந்துள்ளார்.

பிரித்தானிய நாட்டிற்குள் நுழைய எவ்வளவோ முயன்றும், முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் பிரித்தானியாவிற்கு நடந்தே சென்று விடுவது என தீர்மானித்தார்.இதனை தொடர்ந்து பிரான்ஸில் உள்ள ஈரோ சுரங்கப்பாதை வழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப் பயணத்தை தொடங்கியவர் சுமார் 50 கி.மீ கடந்து இங்கிலாந்தில் உள்ள கெண்ட் நகரில் நுழைந்துள்ளார்.

ஆனால், பிரித்தானிய நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி அன்றே அவர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அதே நாளில் பிரித்தானியாவில் குடியேற வழக்கறிஞர் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.இந்த விண்ணப்பம் தொடர்பான பரிசோதனை கடந்த டிசம்பர் 24ம் திகதி வந்தபோது, அப்துல்லிற்கு பிரித்தானிய குடியமர்வு அதிகார்கள் புகலிடம் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வமான இந்த தகவல் சிறையில் உள்ள அப்துல்லிற்கு நேற்று தான் கிடைத்துள்ளது.மேலும், சிறையில் உள்ள அப்துல்லை நிபந்தனையின் அடைப்படையில் விடுதலை செய்ய உள்ளதாகவும், வாரத்திற்கு ஒரு முறை உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் 1951ம் ஆண்டு அகதிகள் சாசன விதியின் படி, போர்க்குற்றங்கள் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள அகதிகள் புகலிடம் கோரி சட்டவிரோதமாக பிரித்தானிய நாட்டிற்குள் நுழைந்தாலும் அவர்களுக்கு எந்தவித அபராதத்தையும் விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.