ஒருவரைத் தாக்கி பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டை கொள்ளையிட்டவர் கைது!!

519

arrests

நபரொருவரைத் தாக்கி, அவர் வசம் இருந்து பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டு மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் அனுராதபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கைதாகியுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி மாலை அனுராதபுரத்தில் ஒருவர் தாக்கப்பட்டதோடு, அவரிடம் இருந்த 350 ரூபாய் பணம் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டும் கொள்ளையிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்டவர் அனுராதபுரம் – ஜெயந்தி மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.