வவுனியா உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் 2016ம் ஆண்டுக்கான கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!!

2589

Vavuniya ATI

உயர் தொழிநுட்பவியல் நிறுவனம் இலங்கையின் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு கிடைக்காத ஆனால் தகைமைஉடைய மாணவர்களுக்கான மாற்றீட்டு உயர் கல்வி வாய்ப்பினை வழங்குகின்ற அரசநிறுவனமாகும்.

2015ம் ஆண்டுக்கான கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தினை பூர்த்திசெய்துள்ளதுடன் 2016ம் கல்வி ஆண்டுக்கான கற்கைநெறிகளுக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் உயர் தேசியகணக்கியல் டிப்ளோமா (HNDA)(4வருடம்), உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா(HNDE)(2 1/2வருடம்), மற்றும் உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம் (HNDIT)(2 1/2வருடம்) ஆகிய கற்கைநெறிகள் நடைபெற்றுவருகின்றன.

இக் கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்கின்ற மாணவர்களில் HNDA பூர்த்திசெய்பவர்கள் பல்கலைக்கழக பட்டத்திற்கு பிரதியீட்டுத் தகைமையினை பெறுவதுடன், அரசதுறையில் பட்டதாரிகள் நியமனத்தின் போதும், தனியார் துறைகளில் இடைநிலைக் கணக்காளர்களாக வரமுடியும்.

மேலும் HNDE மற்றும் HNDIT பாடநெறிகளை பூர்த்திசெய்பவர்கள் தற்பொழுது ஆசிரியர் சேவையில் தகைமையாகக் கருதப்படுவதுடன் தனியார் துறையின் எதிர்பார்க்கைகளுக்கிணங்க தகைமையுடையவர்களாக வெளியேறுகின்றனர்.

விண்ணப்ப முடிவுத் திகதி 15.01.2016

இங்கே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.01.2016 இற்கு முன்னர் அனுப்பி வையுங்கள்.

விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்துங்கள்

Click on Above link >> Right Click on the Application Form >> Save as