அதிக ஆக்ரோஷம் கூடாது : கோஹ்லிக்கு அசாருதீன் அறிவுறை..!

406

kohli

களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷமாக செயல்படுவதை விராத் கோஹ்லி தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் இந்தியாவின் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்தில் இருந்த நடுவர்களிடம் வீணாக வாக்குவாத்தில் ஈடுபட்டார். இது குறித்து அசாருதீன் கூறியது..

இந்திய அணியின் எதிர்கால தலைவராக விராத் கோஹ்லி கருதப்படுகிறார். மிகச் சிறந்த வீரரான இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. இதற்கேற்ப இவர் நடந்து கொள்ள வேண்டும். ஆக்ரோஷமாக இருப்பது நல்லது தான். இது மனதிற்குள் இருக்க வேண்டும். மாறாக அனைவரும் அறியும் வகையில் வெளிப்படையாக காட்டுவது தேவையில்லாதது.

நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு நடுவர்கள் அச்சத்துடன் உள்ளனர். என்னை பொறுத்தவரை களத்தில் இருக்கும் நடுவர்களுக்கு தான் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அசாருதீன் கூறினார்.