100 பயணிகளுடன் தரையிறங்கும் போது வெடித்த விமானத்தின் டயர்!!

697

Air India

டெல்லியில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் போபால் வந்தது. விமானம் போபால் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்தது.

உடனடியாக விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானத்தில் இருந்த 100 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியதாவது:.

விமானம் தரை இறங்கும் போது பலத்த வெடிசத்தம் கேட்டது. தொடர்ந்து நிலநடுக்கம் போல் அதிர்வு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என கூறினார்.