வவுனியாவில் இடம்பெற்ற ஆர்பாட்டத்திற்கு காரணம் வேலைகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்படாமையே : வவுனியா பிரதேச செயலாளர்!!

807

Uthayarasa

வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் இடம்பெறும் சில அபிவிருத்தி வேலைகளுக்கான ஒப்பந்தங்களை சிலருக்கு வழங்காமையினாலேயே திட்டமிட்டு ஆர்ப்பாடங்களை மேற்கொண்டதாக வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தெரிவித்துள்ளார்.

கடந்த செய்வாய்கிழமை மதவுவைத்தகுளம் பகுதியில் கிராம அலுவலருக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கூறுகையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மதகுவைத்தகுளம் கிராமத்திற்கு சில திட்டங்கள் வழங்கப்பட்டது. இதனை கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உட்பட கிராமத்தில் அதிகளவானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள சிலர் தமக்கு அங்கு வழங்கப்பட்ட வேலைகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குமாறு கோரினர்.