வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்!!(படங்கள்)

1209

வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளகின்றனர் குறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தின் நேரமானது 11.12 ஆக காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக பிரயாணி ஒரவர் கருத்து தெரிவிக்கையில் நான் அனுராதபுரத்தில் இரந்து வவுனியா வருகை தந்துள்ளேன் இம் மணிக்கூட்டுக் கோபுரத்தில் நேரமானது தவறாக காணப்படுகின்றது இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரை தொடர்பினை ஏற்புடுத்திய போது தொடர்பினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

20160107_091302 20160107_091305 20160107_091307 20160107_091310 DSC_0356 DSC_0367 DSC_0368