தனியார் வைத்தியசாலைகளுக்கு புதிய நிபந்தனைகள்

467

Hospital

தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் வைத்திய சேவைகளுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களுக்கான செனலிங் கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவிலேயே அறவிட முடியும்.

அத்துடன், விசேட வைத்தியர்கள் நோயாளர்களை குறைந்த பட்சம் 10 நிமிடங்களேனும் பரிசோதிக்க வேண்டும் என்றும் நிபந்தனைவிதிக்கப்பட்டுள்ளது.தற்போது தனியார் வைத்தியசாலையில் வைத்தியர்கள், நோயாளர்களை சில நிமிடங்கள் மாத்திரமே பரிசோதித்து, திருப்பி அனுப்புகின்றமையினால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.