விமானத்தை தவறவிட்டு தவித்த குடும்பம்: ஓடுதளத்தில் புறப்பட்ட விமானத்தை திருப்பி வந்த விமானி!!

460

delta_airlines_002

அமெரிக்க நாட்டில் தந்தையின் ஈமச்சடங்கு நிகழ்விற்கு செல்ல கடைசி நிமிடத்தில் விமானத்தை தவற விட்ட குடும்பத்தினர் மீது இரக்கம் காட்டிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மினிசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து டெனிசியில் உள்ள மெம்பிஸ் நகருக்கு அவரது குடும்பத்தினர் அவசரமாக புறப்பட்டுள்ளனர்.

விமான பயணச்சீட்டினை பதிவு செய்து Minneapolis விமான நிலையத்திற்கு வந்தபோது, அவர்கள் பயணம் செய்ய வேண்டிய டெல்டா ஏர் லைன்ஸ் ஏற்கனவே புறப்பட்டு இருந்துள்ளது.விமானத்தின் என்ஜின்கள் சுழல தொடங்கி ஓடுபாதையில் செல்ல தொடங்கிய நேரம் அந்த குடும்பத்தினர் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சியபோது ‘இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது. விமானம் புறப்பட்டு விட்டது’ என கூறியுள்ளனர்.

நம்பிக்கை இழக்காத அந்த குடும்பத்தினர், கண்ணாடி ஜன்னல் வழியாக விமானத்தை நோக்கி கைகளை ஆட்டி விமானத்தை நிறுத்துமாறு உரக்க கத்தியுள்ளனர்.விமானம் ஓடுபாதையில் புறப்பட தயார் நிலையில் இருந்தபோது ஆடம் கோஹன் என்ற பெயருடைய விமானி குடும்பத்தினரின் குரலை கேட்டு உடனடியாக விமானத்தை திருப்பியுள்ளார்.

பொதுவாக, விமானம் புறப்பட்ட பின்னர் எந்தச்சூழலிலும் விமானத்தை திருப்பக்கூடாது. ஆனால், இதனை அறிந்திருந்தும் விமானி செய்த செயல் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.விரைவாக வந்த குடும்பத்தினர் விமானத்தில் ஏறி உயிரிழந்தவருக்கு சரியான நேரத்தில் இறுதி சடங்குகளை செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 19ம் திகதி நடந்த இந்த சம்பவம் தற்போது தான் ஊடகத்திற்கு வெளியாகியுள்ளது.இது குறித்து பேசிய விமான நிலைய அதிகாரிகள், பிற பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாதவாறு விமானி இரக்கத்துடன் செயல்பட்டு அந்த குடும்பத்தினருக்காக திரும்பி வந்தது குற்றமாக பார்க்கமுடியாது என கூறியுள்ளனர்.

மேலும், விமானியின் இரக்க குணத்தால் தான் தனது தந்தைக்கு சரியான நேரத்தில் இறுதி சடங்குகள் செய்ததாகவும், விமானிக்கு தனது குடும்பத்தினர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த பெண்மணி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.