முதல் முறையாக பள்ளிக்கு சென்ற இளவரசர் ஜோர்ஜ்: புகைப்படம் எடுத்து வெளியிட்ட இளவரசி!!

548

george_school_004

பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் முதல் முறையாக பள்ளிக்கு சென்ற புகைப்படத்தை அவரது தாயார் கேட் மிடில்டன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.பிரித்தானியா இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன் ஜோர்ஜ் தற்போது இரண்டரை வயதை எட்டியுள்ள நிலையில், இவர்கள் வசிக்கும் Norfolk மாளிகைக்கு அருகே உள்ள Westacre Montessori School என்ற பள்ளிக்கு அனுப்பப்படுவார் என்று கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின.

அதன்படி, நேற்று நீல நிற ஆடை அணிந்து, ஜோர்ஜ் பள்ளிக்கு சென்றுள்ளார், அங்கு பள்ளிக்கட்டிடத்தின் வெளிப்புற சுவரின் முன்னால் ஜோர்ஜ் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் அந்த சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை ரசித்து பார்க்கும் புகைப்படம் ஆகிய இரண்டையும் இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்டுள்ளார்.இளவரசர் ஜோர்ஜ் பள்ளிக்கு அடியெடுத்து வைத்துள்ளது அரண்மனை வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.