கிளியைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரை பணயம் வைத்த நபர்!!

296

Parrot

பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கிளியை காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து 30 அடி உயரமான மரத்தில் ஏறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 50 வயதான கென்னி எனும் இந்நபர், கிளியொன்றை 3 மாதங்களாக வளர்த்து வருகிறார். அண்மையில் இக்கிளியானது 30 அடி உயரமான மரமொன்றின் உச்சியை அடைந்த நிலையில் மரத்தின் உச்சியில் சிக்கிக்கொண்டது.

அக் கிளி பறக்க முடி யாத நிலை யில் இருப் பதை பார்த்த கென்னி, கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறத் தொங்கினார். இதன்போது மரத்திலிருந்து விழுந்து காயமடைந்த நிலையில் மரக்கிளையொன்றில் அவரும் சிக்சிக்கொண்டார். பின்னர் தீயணைப்பு படையினர் அங்கு வந்து கென்னியையும் அவரின் கிளியையும் காப்பாற்றினர்.அக்கிளி மிகச்சிறந்த பறவை எனவும் அதை தான் இழக்க நேரிடும் என எண்ணிய போது மார டைப்பு ஏற்படும் போல் இருந்தது எனவும் கென்னி கூறியுள்ளார்.