டோனி உட்பட இந்திய வீரர்கள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்: பிசிசிஐ அதிரடி உத்தரவு..!

564

BCCI

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அணியின் முன்னணி வீரர்களான சுரேஷ் ரெய்னா ஜடேஜா, ஓஜா ஆகியோரை விளம்பரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒப்பந்தம் செய்துள்ள Rhiti Sports நிறுவனத்தில் டோனிக்கு 15% பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால தலைவர் டால்மியா இந்திய வீரர்கள் தங்களது சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

நிறுவனங்களுடான ஒப்பந்தங்கள் குறித்து விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று டால்மியா தெரிவித்தார்.
ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு விரைவில் விசாரணையை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.