வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் பல மாதங்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது : நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி!!

840

 

vavuniya clock tower

வவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக நேற்று நாம் செய்தி ஒன்றை பிரசுரித்து உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தோம்.

எமது செய்தி பிரசுரித்து சிலமணி நேரங்களில் மணிக்கூட்டுக் கோபுரமானது பழுதுபார்கப்பட்டு வழமைக்குத் திரும்பியுள்ளது. மிக விரைவாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்!!(படங்கள்)