ரஜினி விரும்பி ரசித்த மரியான் திரைப்படம்..!

695

Actor Rajini at Kumki Audio Release Functionஎப்போதுமே ஒரு படத்தினை விளம்பரப்படுத்த வேண்டும் என்றால், ரஜினிக்கு திரையிட்டுக் காட்டிவிட்டு உடனே ரஜினி பாராட்டி விட்டார் என்று விளம்பரப்படுத்துவார்கள்.

இதனால் ஒருகட்டத்தில் படம் பார்ப்பதையே தவிர்த்து விட்டார் ரஜினி. எப்போதாவது படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே பார்த்து வந்தார்.

போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்குப் பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு சிறிய அளவில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு திரையரங்கம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறாராம் ரஜினி.

QUBE தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கிறது அந்த திரையரங்கம்.
சமீபத்தில் அவர் பார்த்த படம் மரியான். ஏ.ஆர்.ரஹ்மான், பரத்பாலா, மாப்பிள்ளை தனுஷ் என மூவர் கூட்டணியில் வெளியான படம் அது.