போலி டொலர்களுடன் பாகிஸ்தான் நாட்டவர், இருவர் கைது!!

497

1 (8)

ரூபாய் 2.5 மில்லியன் பெறுமதியான, 18000ம் போலி டொலர்களுடன் பாகிஸ்தான் நாட்டவர், இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு காரச்சியில் இருந்து இந் நாட்டுக்கு வந்த குறித்த நபர்களை, விமான நிலையத்தின் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, சூதாட்டத்தில் விளையாடவே குறித்த பணத்தை கொண்டுவந்ததாக கூறியுள்ளனர்.பின்னர் குறித்த டொலர்களை பரிசோதனை செய்த போது, அவை போலி டொலர்கள், என தெரியவந்துள்ளது.