ஓட்டுநர் தூங்கியதால் நேர்ந்த விபரீதம்: குழந்தைகள் உட்பட பத்து பேர் பலி!!

555

bus_accident_002

திருநெல்வேலியில் இன்று ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட பத்து பேர் பலியாகினர்.காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட பத்து பேர் பலியாகினர்.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில், காரைக்காலில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு தினமும் இயக்கப்படும் தனியார் மல்டி ஆக்சல் ஆம்னி பேருந்து, நேற்று (07ம் தேதி) இரவு 9.30 மணிக்கு காரைக்காலில் இருந்து கிளம்பியது.

அதிகாலையில் நெல்லை வழியாக நாகர்கோவில் நோக்கிசென்றுகொண்டிருந்தது. நெல்லை-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் பணகுடியை அடுத்துள்ள பலாக்கொட்டைபாறை என்னுமிடத்தில் அதிகாலை 5.30 மணிக்கு சென்றுகொண்டிருந்தது.

பேருந்தை ஓட்டிய ஜான் என்பவர் சற்று கண் அயர்ந்ததால், சாலையின் நடுவிலுள்ள கான்கிரீட் சுவர் மீது பலமாக மோதியதில் இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் 5 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 10 பேர் பலியாயினர், காயமுற்ற நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூங்கியதே இந்த கோர விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.