மும்பை சிறுவன் 1009 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தது எப்படி? வெளியான புதிய தகவல்கள்!!

418

sachin_gift_001

மும்பை சிறுவன் பிரணவ் தனவாடே ஒரு இன்னிங்சில் 1009 ஓட்டங்கள் குவித்தது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 15 வயது மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ஓட்டங்கள் (323 பந்து, 129 பவுண்டரி, 59 சிக்சர்) குவித்து உலகசாதனை படைத்தார்.

இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு இன்னிங்சில் 1000 ஓட்டங்களை சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இதைத் தொடர்ந்து பிரணவ் தனவாடேவுக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கையெழுத்து போட்ட துடுப்பாட்ட மட்டையை பிரணவ் தனவாடேவுக்கு பரிசாக அனுப்பி இருக்கிறார்.இந்த நிலையில் பிரணவ் தனவாடே எப்படி 1000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார் என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிர்ஷ்டம்:-

1009 ஓட்டங்களை மனம் தளராமல் விளாசிய பிரணவுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்துள்ளது. அதாவது அவர் 21 முறை ஆட்டமிழப்பில் இருந்து தப்பியுள்ளார்.

பவுண்டரி எல்லைக்கோடு:-

வழக்கமாக சர்வதேச போட்டியில் பவுண்டரி எல்லையின் தூரம் குறைந்தது 59.43 மீற்றர் இருக்க வேண்டும். ஆனால் பிரணவ் தனவாடே விளையாடிய அந்தப் போட்டியில் ‘ஸ்கொயர் லெக்’ எல்லைக்கோடு தூரம் வெறும் 27½ மீற்றர் மட்டுமே இருந்தது.

12 வயது அணியினருடன் மோதல்:-

பிரணவ் தனவாடே அடித்து துவைத்தது ஆர்யா குருகுல் 12 வயது அணியினரை தான். அதாவது 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பதிலாக 12 வயது அணியினரை களம் இறக்கி இருக்கிறார்கள்.ஆர்யா குருகுல் அணியின் பயிற்சியாளர் கூறுகையில், “எங்கள் அணியில் 6 முக்கிய வீரர்கள் தேர்வின் காரணமாக விலகிவிட்டனர். மேலும், 9 முன்னணி வீரர்கள் விலக நேரிட்டது.போட்டியில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு தடை விதிக்க நேரிடலாம். இதனால் வேறு வழியின்றி 12 வயதினர் அணியை களம் இறக்கினோம்” என்று கூறியுள்ளார்.

இது சாதனை இல்லை:-

இதன் அடிப்படையில் சில நிபுணர்கள், பிரணவ் தனவாடேவின் இமாலய ஓட்டங்கள் குவிப்பை சிறப்பு வாய்ந்ததாக கருத முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் இதற்கு முன்பு இந்த மைதானத்தில் யாரும் இது போன்று ஓட்டங்கள் குவிக்கவில்லை.இதே போன்ற பந்து வீச்சு தாக்குதலில் யாராவது இங்கு 300 ஓட்டங்களாவது அடிக்க முடியுமா? என்று பிரணவின் பயிற்சியாளர் ஷர்மா சவால் விடுத்துள்ளார்.