இலங்கை நம்பிக்கை தீவாக மாறியுள்ளது – கோபாலகிருஸ்ண காந்தி !!

411

gandhi

மிகச்சிறிய அரிசி அளக்கும் ஆளாக்கு என்ற அளவைக்குள் கிழக்கு மேற்கு என்ற திசைகள் உள்ளனவா? என்பதை கற்பனை செய்யமுடியாது.எனினும் இலங்கை போன்ற சிறிய தீவில் கிழக்கு மேற்கு என்ற திசைகள் நிச்சயமாக உள்ளன என்று மகாத்மா காந்தியின் பேரன் மற்றும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கோபாலகிருஸ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி நிகழ்வில் சிறப்புரை ஆற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்து கருத்துக்களை வெளியிடுவதை குற்றமாக தாம் கருதவில்லை என்று கோபாலகிருஸ்ண காந்தி குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொடிய பயங்கரவாதத்தை அழிப்பதில் வரலாறாகின்றது என்பதில் சந்தேகமும் இல்லை.இருப்பினும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தமை போரின் கொடிய தன்மையை வெளிப்படுத்துகிறது.வேலுப்பிள்ளை பிரபாகரனின் குழந்தை என்ற காரணத்துக்காக கொடியமுறையில் அந்த குழந்தையை கொன்றதன் மூலம் அந்த குழந்தை பயங்கரமான முறையில் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளது.

இதன்மூலம், சமாதானம் அகன்று சென்றது. துப்பாக்கிகள் மௌனமாகின. அதேநேரம் சமாதான பேச்சுக்களின் குரல்களும் மௌனமாகின.வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். அவரின் குறிக்கோளும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.ஆனால், அந்த குறிக்கோள் தற்போது மறைந்துள்ளதே தவிர மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

பிரிவினைவாதம் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறியுள்ளபோதிலும் அது நிரந்தரமாக வெளியேறவில்லை என்றும் கோபாலகிருஸ்ண காந்தி தெரிவித்தார்.சிங்கள இனவாதத்தையும் தமிழ் இனவாதத்தையும் தாம் எதிர்ப்பதாக குறிப்பிட்ட அவர், மலையக மக்கள் உட்பட்ட அனைத்து சமூகத்தவர்களுக்கும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்தை கையேற்றதன் பின்னர், தேசிய சமாதானம் வரும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.சிறிய தீவு மற்றும் கண்டம் என்பவற்றுக்கு இடையில் உள்ள வித்தியாசம்,தீவு என்பது என்பது மிகவும் சிறியது. கண்டம் என்பது மிக பெரியது.இந்தநிலையில் தற்போதைய ஆட்சியின் கீழ் இலங்கை நம்பிக்கை தீவாக மாறும்.

எதிர்காலத்தில் இலங்கை நம்பிக்கை கண்டமாகவும் மாறும் உறுதிப்பாடு உள்ளதாக கோபாலகிருஸ்ண காந்தி தெரிவித்தார்.கடந்த ஒரு வருட காலப்பகுதியினில் இலங்கையின் தலைவர்கள் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையை கட்டி எழுப்பியுள்ளனர்.பொறாமையை விலக்கியுள்ளனர். இதன் மூலம் இலங்கையை பெரிய நாடாக வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.