
அமெரிக்காவில் குரங்கு ஒன்று தன்னை தானே எடுத்துக்கொண்ட ‘செல்பி’ புகைப்படத்திற்கு காப்புரிமை வழங்க முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தோனேஷியாவில் வாழ்ந்து வரும் Naruto எனப்பெயரிடப்பட்ட குரங்கு ஒன்று மற்ற குரங்குகளுடன் குதூகலமாக விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.
அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் தன்னுடைய கமெராவை தரையில் வைத்துள்ளார்.இதனை பார்த்த அந்த குரங்கு, கமெராவை எடுத்து தன்னை தானே பலமுறை ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அங்கிருந்த பிற குரங்குகளையும் புகைப்படம் எடுத்தது.மனிதர்கள் செல்பி புகைப்படங்கள் எடுப்பது போன்ற மிகத்தெளிவாகவும் துள்ளியமாகவும் இருந்த அந்த புகைப்படதை விலங்குகள் நல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த PETA என்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பு குரங்கு எடுத்த செல்பி புகைப்படத்திற்கு காப்புரிமை(Copyright) வழங்க வேண்டும் என அதே ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘குரங்கு எடுத்த செல்பி புகைப்படத்திற்கு காப்புரிமை வழங்க முடியாது’ என மறுத்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பேசிய PETA நிர்வாகியான Jeff Kerr என்பவர், ‘நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு எதிராக நாங்கள் மேல் முறையீடு செய்து போராடுவோம்.சுயலாபத்திற்காக குரங்கு எடுத்துள்ள புகைப்படத்தை பயன்படுத்தி காப்புரிமை பெறுவதை ஏற்க முடியாது நீதிமன்றம் கூறியிருப்பது நாடகமாடும் வேலை என அவர் விமர்சனம் செய்துள்ளார்.





