இஸ்ரேலிய வீரர்களை கத்தியால் குத்த முயன்ற இரு பாலஸ்தீனியர்கள் பலி!!

284

isrel

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலேமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு சமூகத்தினரும் வழிபடக்கூடிய வழிப்பாட்டுதளங்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தான்.

ஜெருசலேமில் உள்ள அல் அசா மசூதி முஸ்லிம்கள் கட்டுபாட்டில் உள்ளது. அதேசமயம் அந்த வளாகம் யூதர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. சமீபகாலங்களில் அங்கு வருகை தரும் யூதர்களின் எண்ணிக்கையை இஸ்ரேல் அரசு அதிகரித்து வருவதாக பாலஸ்தீன் கூறி வருகிறது.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதுடன் அண்மை காலமாக அங்கு அடிக்கடி மோதல்களும் நடந்து வருகின்றன. இந்த மோதல்களில் ஒருவினோதமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. ஜெருசலேமில் நடமாடும் இஸ்ரேலியர்கள் மீது பாலஸ்தீனியர்கள் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கத்தி குத்தில் ஈடுபட முயலும் அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவது தான். இது தான் அங்கு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், படை வீரர் மீது கத்து குத்து தாக்குதலில் ஈடுபட முயன்ற இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த மோதல் சம்பத்தில் இஸ்ரேலிய நாட்டினர் 21 பேர் பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்டனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட முயன்றதாக இதுவரை 137 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பங்களுக்கு இருதரப்பினரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.