
அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள குடியேறிய சமூகத்திற்கு மேலும் உதவி மற்றும் ஒத்துழைப்பினை வழங்க, நோர்வே முன் வந்துள்ளது. இதற்கமைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் நோர்வே அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமைய அண்மையில் மீள் குடியேறியவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட ஆலோசனைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு, என்பன வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கை பிரதிநிதி ஜோஏன் சொர்என்சனுக்கும், இலங்கைக்கான நோர்வே தூதுவர் தொர்ப்ஜேர்ன் கௌஸ்லமசயித்தருக்கும் இடையே கைச்சாத்தாகியுள்ளது.





