
21 ஆம் நூற்றாண்டுக்கு உகந்த வகையிலான அரசியலமைப்பு ஒன்று இந்த வருட இறுதிக்குள் தயாரிக்கப்படும், என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் இளைஞர் சமூக சம்மேளனங்களின் உறுப்பினர்களின் சந்திப்பொன்று, அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர், புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடாளுமன்றம் வலுப்படுத்தப்படும், என குறிப்பிட்டார். மனிதவுரிமைகள் பாதுகாக்கப்படும், புதிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும். இந்த விடயங்களை முன்வைத்து 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பு திருத்தம் ஓன்றும் ஏற்படுத்தப்படும், என பிரதமர் தெரிவித்தார்.
அந்த திருத்தம் மக்கள் கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை அரசியல் செயற்பாடுகளுக்காக ஈடுபடுத்தப்படும், எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.





