
புதிய வகையான இன்புஃளுவன்சா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் இலங்கையினுள் பரவக்கூடிய சாத்தியக் கூறுகள், இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் வெளிநோயாளர், பிரிவுகளில் தொற்றுள்ள நோயாளர்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
நோயாளர்களிடம் இருந்து பெறப்படும் குருதி மாதிரிகள் அரச மருத்துவ ஆய்வு நிறுவனத்திக்கு அனுப்படும், என சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் வவுனியா பிரதேசத்தில் இன்புஃளுவன்சா தொற்றுள்ள 3 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, வவுனியா ஆதார மருத்துமனையின் பணிப்பாளர், கே.அகிலேந்திரன் தெரிவித்தார்.
வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறசென்றிருந்த போதே, அவர்களுக்கு இன்புளுவன்சா தொற்று ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், தற்போது தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் பணிப்பாளர் தெரிவித்தார். பெரும்பாலும், காற்றின் மூலமாகவே இன்புளுவன்சா தொற்று பரவுகின்றது. இன்புளுவன்சா தொற்றினால் பீடிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து தும்மல் மற்றும் இருமல் உள்ளிட்ட நோய் காரணிகளால் பிறதொருவருக்கு பரவும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





