
ஐல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதல் அதை தடை செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்புகள் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து உச்சநீதிமன்றமும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐல்லிக்குட்டுக்கு தடை விதித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தன.இதனை ஏற்று மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கும், பெரும் முயற்சி எடுத்த மத்திய அமைச்சர்கள் பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஜாவடெகர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாகப்பட்டினத்தின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.ஆனால் தற்போது அந்த சுவரொட்டிகளே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
எனெனில் நன்றி தெரிவிக்கும் அந்த சுவரொட்டியில் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கிய ‘உலகத் தலைவன்’ மாண்புமிகு பிரதமர் மோடிஜி, மாண்புமிகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேட்கர், பெருமுயற்சி எடுத்து வெற்றிகண்ட குமரித் தங்கம், வீரத் தமிழன் பொன்னார் அவர்களுக்கு நன்றியையும் ”வீரவணக்கங்களை”யும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக வீர வணக்கங்கள் என்பது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது மட்டுமே குறிப்பிடப்படும் வாசகம்.ஆனால் தற்போது ஆர்வகோளாறு காரணமாக ,பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு வீர வணக்கம் சுவரொட்டிகள் அடித்து ஒட்டியிருப்பது நாகப்பட்டினத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





